பிலியந்தலை – ஜாலியகொடை பகுதியிலுள்ள கிளை வீதியொன்றில் பந்தயத்துக்காக உந்துருளி செலுத்திய 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற்பகல் முதல் நள்ளிரவு வரை உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் பந்தயத்தில் ஈடுபடுவதாக காவல்துறையின் அவசர இலக்கத்திற்குத் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது 18 பேர் கைது செய்யப்பட்டதுடன், 12 உந்துருளிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here