காசா முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தாக்குதலில் 192 பேர் வரை காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகள் 10 பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளது.
இதேவேளை, இரண்டாம் கட்ட போலியோ தடுப்பூசி வேலைத்திட்டத்தின் இறுதிக் கட்டம் வடக்கு காஸாவில் நேற்று தொடங்கப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தீவிர இஸ்ரேலிய குண்டுவீச்சுகள், பாரிய இடப்பெயர்வு மற்றும் பிராந்தியத்தில் அணுகல் இல்லாமை போன்ற காரணங்களால் இரண்டாவது கட்ட போலியோ தடுப்பூசி திட்டம் கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், போலியோ தடுப்பூசி வேலைத்திட்டத்தின் போது வரிசையில் நின்ற 6 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







