பொலன்னறுவை – கிரித்தலை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (09.12.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

69 வயதுடைய நபர் வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயோதிபர் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here