கண்டி மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினம் (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே, அம்மாணவி  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் மாணவி காணாமல் போன விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் அவரது குடும்பத்தினரால் முறைப்பாடு  செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி போதனா  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here