தனது தாயரை கடந்த மாதம் 10ம் திகதியிலிருந்து முல்லைத்தீவு செல்வபுரத்திலிருந்து காணவில்லை என்றும் தனது தாயாரை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் காணாமல் போனவரான சலோமியாம்பிள்ளை மேரி பிலோமினாவின் மகள் முடியழகன் வேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் நேற்று (30/05/2025) கற்கோவளத்திலுள்ள தனது இல்லத்தில் வைத்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தனது தாய் வாய் பேச மாட்டாதவர் என்றும் அவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றதாகவும், அவர் அங்கும் செல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது தாயார் முல்லைத்தீவு, மற்றும் பிலோமினா என்று மட்டுமே பேசத்தெரிந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் அவர் தொடர்பான தகவல் ஏதும் இருந்தால் தமது தொலைபேசி இலக்கமான 0775570692 தொடர்புகொண்டு அறியத்தருமாறும் கோரியுள்ளார்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here