அலாஸ்காவில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் சிதைவுகளை மீட்புக் குழுக்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலாஸ்காவின் நோம் நகரிலிருந்து சுமார் 34 மைல் தொலைவில் உள்ள பனி மலைகளில் 10 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் நேற்று (7) காணாமல் போனதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் படி விமானி உட்பட விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுவரை அவர்களில் மூன்று பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மதியம், பெரிங் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சிறிய பயணிகள் விமானம், அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து நோமுக்கு பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போனது, மேலும் விமானத்தைத் தேட சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக இது தடைபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here