வடமாகாண மக்களுக்கான உரிமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் 22,000 காணி உறுதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், 18,000 காணி உறுதிப்பத்திரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உரிமய திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள காணி உறுதி பத்திரங்களின் எண்ணிக்கை 20 இலட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








