2006 ஆண்டு ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென்ற ஒரு இடத்தை திரையுலகில் பிடித்திருக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் உள்ள ‘காவாலா’ பாடல் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருந்தார். பிறகு சுந்தர்சியின் அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், அவர் இப்போது விஜய் வர்மா என்ற நடிகரைக் காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் இக்காதல் குறித்து இருவரும் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். ஆனால் இப்போது இருவரும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா ரிலேஷன்ஷிப் குறித்து பேசியிருக்கிறார். ” உங்கள் பார்ட்னரின் குணாதிசயங்களை எந்தவிதத்திலும் நீங்கள் மாற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்பது அவர்களைக் கட்டுப்படுத்துவது போன்றது’’.

அதுபோல ரிலேஷன்ஷிப்பில் பொய் சொல்வது என்பதும் இருக்கக்கூடாது. சிறிய அளவிலான பொய்களைக் கூட சொல்லக்கூடாது. நீங்கள் காதலிக்கும் பெண் சொல்வதைக் கேளுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் காது கொடுத்துக் கேளுங்கள். எல்லா நேரங்களிலும் அவர்கள் உங்களிடம் தீர்வை தேடி வருவதில்லை. அவர்கள் சொல்வதை கேட்பதற்கு ஒரு நபர் தேவை. அதனைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்சினைகளைக் கேளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர் சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட ஹார்ட் – பிரேக் குறித்தும் பகிர்ந்துள்ளார், “எனக்கு யாராவது கிஃப்ட் தந்தால் கோபம் வரும். ஏன்னென்றால் கிஃப்ட் கொடுப்பது என்பது ஒருவரை ஒரு பொருளுக்குள் அடக்குவது போன்றது. மேலும் அது ரிலேஷன்ஷிப்பிற்கு விலை நிர்ணயம் செய்வது போல இருக்கும். நான் ஒரு ரிலேஷன்ஷிப்பிற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய காதலை மிகவும் வெளிப்படுத்துவேன்.

அனைவருக்கும் தெரியும் நம் பாட்னர்கள் எதை சொன்னால் கோபப்படுவார்கள் என்று அதனால் நான் எனது பாட்னரிடம் கோபப்படுத்துகின்ற விஷயங்களைச் சொல்லவே மாட்டேன். எனக்கு ஒரு ஹார்ட் பிரேக் (காதல் தோல்வி) சிறுவயதில் இருந்தது. அந்த ஒரு நபருக்காக எல்லாத்தையும் நான் விட வேண்டுமா என்று நான் யோசித்தேன்.

வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் அனுபவிக்க வேண்டியதிருக்கிறது என்று நினைத்தேன். தவிர இரண்டாவது ஹார்ட் பிரேக் கொஞ்சநாள் கழித்து நடந்தது. அந்த ஹார்ட் பிரேக்கை பொறுத்தவரை அந்த நபர் என்னுடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்களைக் கொடுக்கவில்லை. அதனால் அந்த காதலையும் கைவிட்டுவிட்டேன்” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here