காத்தான்குடி மத்திய கல்லூரியின் முதலாவது பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் தமிழ் இலக்கிய முதலாம் பகுதி பாட வினாத்தாளுக்கு வழங்கப்பட்ட நேரம் நிறைவடைவதற்கு முன்னதாகவே புள்ளடியிடும் விடைத்தாள்கள் மீளப்பெறப்பட்டதாக சில மாணவர்களின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மாணவர்களும் பெற்றோர்களும் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பாடப் பரீட்சையில் பகுதி ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேரம் நிறைவதற்கு முன்னதாக புள்ளடியிடும் விடைத்தாள் பரீட்சைகள் மேற்பார்வையாளரால் மீளப் பெறப்பட்டதாகவும், இதனால் மாணவர்களுக்குரிய முறையில் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போயுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக இரண்டு மண்டபங்களில் பரீட்சை இடம்பெற்ற நிலையில் ஒரு மண்டபத்தில் மாத்திரமே இவ்வாறு இடம்பெற்றதாகவும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சிலரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here