யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது.

இச் சம்பவம் நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த பிரதேச மக்கள் பொலிசாருக்கும் கடற்படையினருக்கும்  தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிசாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும் பவுசர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்

அதிகாலை 2 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதன்போது பெருமளவான மரங்கள் தீயினால் எரிந்து நாசமாகியது. இருப்பினும் தீப்பரவலுக்கான காரணம் அறியப்படவில்லை.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(யாழ் நிருபர்; கஜிந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here