கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்று(13 ), நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) ஆகிய தினங்களில், நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், உரிய தகைமைகளைப் பெற்று இதுவரை அழைப்புக் கடிதங்களை பெறாத விண்ணப்பதாரர்கள் www.moha.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here