லொஹான் ரத்வத்தவின் மனைவி சட்டவிரோதமான முறையில் சொகுசு மகிழுந்து ஒன்றைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி, டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று (22) அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிரிஹான பகுதியில் உள்ள லொஹான் ரத்வத்தவின் மனைவியின் வீட்டிலிருந்தே குறித்த இலக்க தகடு இல்லாத, பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் மீட்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் லொஹான் ரத்வத்தவின் மனைவி கடந்த நவம்பர் 4ஆம் திகதி நுகேகொடை நீதவான் ருவினி ஜயவர்தன முன்னிலையில் தனது சட்டத்தரணி ஊடாக முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here