கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுவெல பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி காலை அமல் சில்வா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கொலையை செய்த நபர்களுக்கு தங்குமிட வசதி மற்றும் ஆதரவை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 08 ஆம் திகதி அத்துருகிரியவில் கிளப் வசந்த என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரின் சாரதி ஆகியோர் கடந்த 28 ஆம் திகதி இரவு பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here