Saturday, August 1, 2026
No menu items!

கிளப் வசந்த

பிரபல பாதாள உலகக் குற்றவாளியான லொக்கு பெட்டி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்..!

அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான சுஜீவ ருவன்குமார டி சில்வா அல்லது ‘லொக்கு பட்டி’ பெலாரஸில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பல வழக்குகளில் தொடர்புடைய ‘லொக்கு பட்டி’, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெலாரஸில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி)...

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்களுக்கு பிணை..!

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 08 சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம மேல் நீதிமன்ற நீதவான் மொஹமட் இர்ஷாதீன் இன்று செவ்வாய்க்கிழமை (10.12.2024) உத்தரவிட்டுள்ளார். எட்டு சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் இரு சரீரப் பிணையில் விடுதலை செய்ய...

கிளப் வசந்த் கொலை – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு….!

கிளப் வசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்களை 12 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (02) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பாக அமல் சில்வாவிற்கு விளக்கமறியல்….!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடுவெல பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த 29ஆம் திகதி காலை அமல் சில்வா கைது...

கிளப் வசந்தவின் நிர்வாண புகைப்படங்கள் வெளியானது எப்படி?  

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவின் சடலத்தின் நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சுமார் 30 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார்...

க்ளப் வசந்த மனைவியின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம்…!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவரை வழக்கமான வார்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெட்டூ...

கிளப் வசந்த கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது…!

கிளப் வசந்த உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரு சந்தேநபர், கொரத்தோட்டை பிரதேசத்தில் இருந்து வெலிஹிந்த பிரதேசத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும் கார் சாரதியையும் வேன் ஒன்றில் ஏற்றிச் சென்று,...

கிளப் வசந்த கொலை வழக்கு – 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில்…!

அத்துரிகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை குத்தும் நிலையத்தில் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 8 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில்...

கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பெண்ணொருவர் கைது…!!

21 வயதுடைய யுவதியொருவர் கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய நகரில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img