21 வயதுடைய யுவதியொருவர் கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய நகரில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







