ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என்பதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவாகியுள்ள கண்ணகிபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளிதரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர், கிராம சேவையாளர்,கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.குறித்த திட்டம் மூலம் குறித்த கிராமத்திற்கு 10 மில்லியன் ரூபா அபிவிருத்திக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
தொடர்ந்து அமைச்சர் ஊடகங்களுக்கு இந்திய விஜயம் தொடர்பாகவும், திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் கருத்து தெரிவித்தார்.
கிடைத்திருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கிடைத்திருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடல் உழைப்பின் ஊடாக இக்கிராமத்தை ஓர் முன்மாதிரி விவசாய உற்பத்தி கிராமம் உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர் காலம் இக் கிராமம் ஓர் புதிய யுகமாக மாற்றி உருவாக்க அனைத்து மக்களும் உழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்..
இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் கண்ணகிபுரம் கிராமம் தெரிவாகியுள்ள நிலையில் அதன் அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இக்கோரிக்கையை விடுத்திருந்தார்.
உடல் உழைப்பின் ஊடாக இக்கிராமத்தை ஓர் முன்மாதிரி விவசாய உற்பத்தி கிராமம் உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர் காலம் இக் கிராமம் ஓர் புதிய யுகமாக மாற்றி உருவாக்க அனைத்து மக்களும் உழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்..
இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் கண்ணகிபுரம் கிராமம் தெரிவாகியுள்ள நிலையில் அதன் அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இக்கோரிக்கையை விடுத்திருந்தார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.







