கிளிநொச்சி, புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட துவரையாற்றை அண்டிய பகுதிகளிலுள்ள சுமார் 600 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வெள்ள அனர்த்தத்தினால் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இரணைமடுக்குளத்தின் வான் நீர் பாய்ந்தமையினாலேயே குறித்த அழிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடனைப்பெற்று நெற்செய்கை மேற்கொண்ட நிலையில் தாம் கடனை எவ்வாறு செலுத்தப்போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரிய அதிகாரிகள் தமது வயல்நிலங்களை பார்வையிட்டு தமக்கு நஷ்ட ஈட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் கடந்த வருட காலபோக நெற்செய்கையில் பாரிய அளவிலான நோய் தாக்கம் ஏற்பட்டு அறுவடையின் போது பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டோம். அதே போன்று இம்முறையும் வெள்ளத்தினால் பல விவசாயிகளின் நெற்செய்கை அழிந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

  • கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here