இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 199 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 90 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த சுப்மன் கில் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here