குடா கங்கை மற்றும் மகுர கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறு வெள்ள நிலை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

களு கங்கையின் குடா கங்கை உப வடிநிலத்தின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தால் களு கங்கை வடிநிலத்தில் பராமரிக்கப்படும் நதி நீர் மட்ட அளவீடுகளின் பகுப்பாய்வின்படி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா கங்கை மற்றும் மகுர கங்கையின் வெள்ளப்பெருக்கு சமவெளிக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள நிலை ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி குடா கங்கை மற்றும் மகுர கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் ஊடாக செல்லும் உப வீதிகள் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளதாகவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here