உகாண்டா தலைநகர் கம்பாலாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக இந்த குப்பை மேடு சரிந்துள்ளதாகவும், அதற்கு அருகில் உள்ள வீடுகள் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலர் இதில் சிக்குண்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு இதுவரையில் 14பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








