குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும்  ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நேற்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி  குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் அக்காணியின் உரிமையாளர் தனது இரு பணியாட்கள் மூலம் உழவு இயந்திரத்தைக் கொண்டு குருந்தூர் மலை பகுதியில் உழவு செய்துள்ளார்.

இதன்போது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, பௌத்த துறவி கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.

அம்முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விவசாயிகள் இருவரும் கைது

செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் மே  15ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து  மே 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில்  வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவர்களின் விளக்கமறியல்  மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here