கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அது 2025.05.30 ஆம் திகதியுடன் முடிவடையும்.
இதற்கமைய, 2025 ஜூன் மாதம் 02 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அன்றைய நாளில் முதல் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே நாளொன்றை ஒதுக்கிக்கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் அல்லது முன்னுரிமை தேவையுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மேற்படி காலப்பிரிவிற்குள் தமது விண்ணப்பங்களை ஒருநாள் சேவையின் கீழ் ஒப்படைக்க முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் பிரதான அலுவலகத்தில் சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்கள் மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.எனவும் பிராந்திய அலுவலகங்களில் முன்னர் போன்றே மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை சாதாரண சேவை மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








