13 நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட குற்றத்தடுப்பு வேலைத்திட்டத்தின் மூலம் 4,020 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி குற்றத்தடுப்பு விசேட வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள சாலைத் தடைகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் சட்டத்தை எதிர்த்த 249 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைது வாரண்ட்களைத் தவிர்த்து வந்த 4,020 நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாட்டில் இருந்து செயற்படும் பாதாள உலகக் குற்றவாளிகள் பலரை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.

இதுபோன்ற 4 குற்றவாளிகள் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் நாடு கடத்தப்படுவதாக அவர் கூறினார்.

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பொதுவாக பதிவாகும் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here