இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.

இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரியும் இவர் ஆவார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால, இலங்கை பொலிஸ் வரலாற்றில் சரித்திரம் படைக்கும் பெண் கதாபாத்திரமாக பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here