குளிர்காலத்தில் 68,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மத்தலவுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் தலைமையின் கீழ் முதல் கட்டமாக 410 ரஷ்ய பயணிகள் நாட்டை வந்தடையவுள்ளனர்.

ரெட் விங்ஸ் விமானம் ஊடாக மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து அவர்கள் இன்று பிற்பகல் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளனர்.

ரஷ்யாவின் மொஸ்கோ, கசான் (Kazan), சோச்சி, சமாரா உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து 160 விமானங்கள் ஊடாக ஒரு வாரத்திற்குள் 68,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here