குஷ் ரக போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதுடைய குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 7.91 கிலோகிராம் நிறையுடைய குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி 7 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here