பெங்கொக்கில் இருந்து 2 கிலோ 400 கிராம் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய தம்பதியினரை, கட்டுநாயக்க சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களின் பயண பொதியினை சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு பிரவேசித்த யூ.எல் 403 ரக விமானத்தில் குறித்த இருவரும் வருகை தந்துள்ளனர்.
கைதானவர்கள் 29 மற்றும் 30 வயதுகளை கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.








