இன்று அதிகாலை பாணந்துறை பின்வத்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் வந்த மூன்று நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண்கள் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பெண்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

59 மற்றும் 46 வயதுடைய பின்வத்த ஊரன்ன படவத்த பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here