கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல – பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில், 16 வயது சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவரென கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், காதல் தொடர்பான முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








