தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களின் புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதலின் படி,
சஞ்சீவ தர்மரத்ன அவர்கள் நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதற்கு முன் அந்தப் பதவியை வகித்த லலித் பத்திநாயக்க குறித்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மத்திய மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.








