முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை டிசம்பர் 19 ஆம் திகதி வரை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரம்புக்வெல்ல ஜூனியர், கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியிலுள்ள சொத்துக்களை முறையே 80 மில்லியன் ரூபாவுக்கும் 65 மில்லியன் ரூபாவுக்கும் கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக டிசம்பர் மாதம் வரை சொத்துக்களை பயன்படுத்த தடை விதிக்குமாறு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here