சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் ரக வாகனமொன்று பிங்வத்தை – பாடசாலை மாவத்தை பகுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இரத்மலானை தொடருந்து நிலையத்துக்கு அருகிலிருந்து இரண்டு லேண்ட் ரோவர் ரக வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.

வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதி கொண்ட குறித்த 3 வாகனங்களும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினூடாக வீதி பாவனையிலிருந்து அகற்றப்பட்ட பழைய வாகனங்களின் இலக்கத்தகடுகளின் கீழ் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் குறித்த வாகனங்களின் உரிமையாளர் என சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா, வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகனங்கள் தொடர்பான சமர்ப்பணங்கள் இன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here