Tuesday, April 21, 2026
No menu items!

போக்குவரத்து திணைக்களம்

34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்க தடை!

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார். மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் தலைமையக காவல்துறையினர் இணைந்து நேற்று நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 45 பேருந்துகள் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான...

பிலிப்பைன்ஸில் பேருந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு..!

வடக்கு பிலிப்பைன்ஸில் மிகவும் பரபரப்பான அதிவேக வீதிகளில் ஒன்றில் கட்டணம் அறவிடப்படும் வாயில் பகுதியில் பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து  நேற்று (1) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான...

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை வாக்களிப்பு நிலையமாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மீது கோபமடைந்த கோபாகுழு!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் கோபா என்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் உரிய தயார்ப்படுத்தலுடன் அங்கு முன்னிலையாகியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கோபா குழு அந்த திணைக்களத்தின் அதிகாரிகளை மற்றுமொரு தினத்தில் தயார்ப்படுத்தலுடன் வருமாறு அறிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம்...

ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் அறிவிப்பு..!

2025 ஜனவரிக்குள் 130,000 ஓட்டுநர் உரிமங்களின் நிலுவையை அகற்றுவதற்கான திட்டங்களை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சேவைகளை நவீனமயமாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தின் ஒரு பகுதியாக, ஒன்லைன் அமைப்பின் மூலம் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட உள்ளது. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமான...

கைப்பற்றப்படும் சட்டவிரோத வாகனங்கள் – முக்கிய உறுப்பினர்கள் மீது சந்தேகம்..!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் ரக வாகனமொன்று பிங்வத்தை – பாடசாலை மாவத்தை பகுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. அதேநேரம் இரத்மலானை தொடருந்து நிலையத்துக்கு அருகிலிருந்து இரண்டு லேண்ட் ரோவர் ரக வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன. வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதி...

3000க்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றத்தினால் இடைநிறுத்தம்!

2024ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தவருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். சாரதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நடைபெற்ற விசாரணைகளின் போதே நீதிமன்றங்கள் இந்த உத்தரவுகளை...

தேர்தல் நடவடிக்கைகளுக்காக மூடப்படும் போக்குவரத்து திணைக்களம்!

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகங்களை எதிர்வரும் 20ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக குறித்த அலுவலகம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு!!!

சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகம் செய்வது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. சுமார் நான்கு லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்னமும் விநியோகம் செய்யப்படாது நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் சுமார் 850,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகம் செய்யப்படாதிருந்தததாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த தெரிவித்துள்ளார். மேலும், இந்த எண்ணிக்கை தற்பொழுது நான்கு...

வாகனங்களை வாங்குபவர்களுக்கு அறிவிப்பு

வாகனங்களை வாங்கி சொந்த பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்துபவர்கள் விரைவில் தங்களது பெயரில் பதிவு செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்  விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போது சிசிடிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் கடிதம் அனுப்பும் திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் மோட்டார்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img