முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு ரூ.50,000 இலஞ்சம் வழங்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்ட அலுவலக உதவியாளர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த இலஞ்ச முயற்சி தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ஹெட்டியாராச்சியை கைது செய்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன பல ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என கண்டறியப்பட்டதை அடுத்து ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here