டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் என்பவர் மீண்டும் எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான வழக்கு இன்று (25) அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விசாரணைகளை அடுத்து ஷிரான் பாசிக்கின் பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்தமை மற்றும் பணமோசடி தொடர்பாக பிரபல தனியார் வகுப்பு ஆசிரியரும் சந்தேக நபராக பெயரிடப்பட்டார்.

அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் கடந்த செப்டம்பர் 11ம் திகதி கைது செய்யப்பட்டார்.

ஷிரான் பாசிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தை செலவழித்து கம்பஹா பகுதியில் தனது பெயரில் ஆடம்பர வீடு ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here