தெஹிவளையில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை மட்டும் அவர்களது தந்தை படுகாயமடைந்தமைக்கு காரணமான கையெறி குண்டு தாக்குதல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குள் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்திருந்தது.

தாக்குதலின் பிரதான சந்தேக நபரும், குற்றத்திற்கு உதவியதாக கூறப்படும் மேலும் இருவரும் முன்னர் ரிதிமாலியத்தை, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் அதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னர் காவலில் எடுக்கப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து தற்போதைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 11 கிராம் 960 மில்லிகிராம் “ஐஸ்” மெத்தம்பெட்டமைன் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

30 மற்றும் 31 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் முறையே பிலியந்தலை மற்றும் கஹதுடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here