கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை கார் ஒன்றை சோதனையிட்ட போது 24 மற்றும் 32 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் 19 கொக்கெய்ன் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கொழும்பில் இருந்து பயணித்த காரை அக்மீமன பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் (PNB) மேற்கொண்ட விசாரணைகளில், கொள்ளுப்பெட்டியில் உள்ள சியரா லியோனியர் ஒருவரே சந்தேகநபரிடம் கொக்கெய்னை ஒப்படைத்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

PNB அதிகாரிகள் 52 வயதான Sierra Leonean என்பவரே 40 கொக்கெய்ன் காப்ஸ்யூல்கள், 500 அமெரிக்க டொலர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் பொரளையில் வைத்து மேலும் 28 வயதுடைய மற்றொரு சந்தேக நபருடன் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here