கொலை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பிலும் ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பிலும் சந்தேக நபருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்திலும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்திலும் இரு வழக்குகள் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.








