மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை, 21) நள்ளிரவில் பயணிகளுடன் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று, பெரியகட்டு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
சாரதியின் நித்திரை கலக்கம் விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








