கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

“அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இருப்பினும், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சிப்பது ‘அத தெரண’ கெமராவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், பொலிஸ் நீர்த்தாரை வாகனஙக்ள், கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here