கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில், வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டிடம் என்பன சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான, தலங்கம படபொத பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சந்தேகநபர், சிலரால் தாக்கப்பட்டு முல்லேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








