கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் காலை 8 மணிக்கு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பல பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தது சிறப்பு அம்சம்.
நடைபவனியில்கலந்துகொண்டவர்களுக்கு கொழும்புத்துறைசனசமூகநிலையத்தினரால் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வு மிக சிறப்பாக 11 மணியாளவில் நிறைவுக்கு வந்தது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.









