கொஸ்கொட, மஹா இந்துருவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக துப்பாக்கிச் சூடு முயற்சி இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டிற்கு வெளியேயும் பின்னர் வீட்டிற்குள்ளும் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி டிஸ்சார்ஜ் செய்யத் தவறியதால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் ரக துப்பாக்கி, வீட்டின் அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில், தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here