யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த கோட்டையின் மரபுரிமையினை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுலா ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் பாதுகாப்பு கற்தூண் வேலியிடல் செயற்பாடானது நேற்று (1/29/2025) உத்தியாகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வானது யாழ். பிரதேச தொல்லியல் காரியாலய உதவிப்பணிப்பாளர் UA பந்துலஜீவ தலைமையில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் லியனகே, உதவி பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் சி.கிருஷ்ணேந்திரன் மற்றும் பொறியியலாளர், மத்திய கலாச்சார நிதிய திட்ட முகாமையாளர் சுமித் ரணசிங்க மற்றும் உத்தியோகத்தர்கள், கோட்டையின் நலன்விரும்பி அஜந்தா,தொல்லியல் திணைக்களத்தோடு சேர்ந்து பணியாற்றி அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் AK kamal photography  மற்றும் அக்வைனேஸ் நிறுவன பணிப்பாளர் என பலரும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

இச் செயற்பாடானது தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு கோட்டையின் வெளிப்புறம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here