களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்க உட்பட்ட தியகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1,080 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தியகம, கல்பாத பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here