தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இன்று (29) கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் தபால் தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, மகஜர் வழங்குவதற்காக சுகாதார அமைச்சுக்கு பேரணியாகச் செல்லவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
15 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் நேற்று பிற்பகல் முதல் இரண்டு நாள் நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.








