Large counter in roadside farmers stall in Sri Lanka filled with ripe fruits and vegetables

வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்களை உடனடியாக அகற்றவேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மாநாடு மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இவ்வாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், போக்குவரத்து சட்டங்களை கடுமையாக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், போக்குவரத்து சட்டங்களை மீறுவோறுக்கு எதிராக சட்டநடவடிக்கை

எடுக்கப்படவுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here