1957ம் ஆண்டு ஆசிரியையாக கண்டி மாவட்டத்தில் முதல் நியமனத்தை பெற்று ஓய்வு பெற்ற ஒருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் மொழி பாடத்துக்கு தோற்றிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இம் முறை, ஹொரண பிரதேசத்தில் நடந்த நிகழ்வு ஒன்று பற்றி மேலும் தெரிய வருவதாவது-

அங்குரவாத்தொட்ட, பிரபுத்தகம என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1937ம் ஆண்டு பிறந்தவர். ஆசிரியையாக இருந்து 30 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்ற இவரின் பெயர் மிசலின் நோனா. இவர் இம்முறை ஹொரண தக்சீலா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் தனது பேரன் பேத்திகளது வயதை ஒத்தவர்களுடன் அமர்ந்து பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இவர் எந்த ஒரு ஆசிரியரின் உதவியும் இன்றி சுயமாக புத்தகங்களைப் பார்த்து தமிழ் மொழியை கற்றுக் கொண்டுள்ளார். இவர் ஆசிரியராக முதல் நியமனத்தை கண்டி மாவட்டத்தில், மடுகல்ல பிரதேசத்தில் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். கல்விக்கும் கற்றலுக்கும் வயதெல்லை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here