உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
போர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதார திறன், இராணுவ வலிமை, உள்நாட்டு நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான கூட்டணி, அரசியல், இராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்து உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு மிகவும் சக்திவாய்ந்த 10 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளதோடு சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. அத்தோடு ஏனைய நாடுகள் அடுத்த அடுத்த இடத்தைப் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








