ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் இரவு வேளையில் சுவரொட்டிகளை   ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்  நள்ளிரவு வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மாமாங்கம் பகுதியில் வீதியிலுள்ள மின்சார தூண்கள் மற்றும் சுவர்களில் இருவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்துள்ளனர்.

அதனையடுத்து, இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here